தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்று பிற மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று விழுப்புரத்தில் 110 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுவரை 1602 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஇருந்த நிலையில் மொத்த பாதிப்பு 1712ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரத்தில் மட்டும் 993பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 17பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.