Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துரத்துக்கு கொரோனா…. துவண்டு போன மதுரை…. காலை வரை 310பேர் பாதிப்பு …!!

மதுரை மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னையில் முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மதுரை கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக விளங்குகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வண்ணம் இருப்பது தமிழக மக்களையும், அரசையும் சற்று நிலை குலைய வைத்துள்ளது. இருந்தாலும் பல்வேறு விதமான முன்னெடுப்புகளை சென்னையின் போல மேற்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இன்று காலை வரை மதுரையில்புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6849ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 3,803 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் 120 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றார்கள்.

Categories

Tech |