நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகள், நடவடிக்கையின் பயனாக தொற்று அதிகம் இருந்த தலைநகர் சென்னை பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் முன்பு இருந்ததை விட குறைந்து வருகின்றது. நேற்று வரை 78,573 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,694 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 16,601பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். 1277 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளநிலையில் நேற்று இரவு முதல் காலை வரை சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், பிற மருத்துவமனையில் 6 பேரும் நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்கள்.