தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடத்தல் செயலை தடுக்கவும், கடலோர காவல் படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணையில், தூத்துக்குடியிலிருந்து பீடி இலை பண்டல்களை யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது கடலுக்குள் அவை தவறி விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதைன்பின் பறிமுதல் செய்த பீடி இலை பண்டல்களை கடலோரக் காவல்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த பண்டல்கள் கடலோர காவல்படை டிஐஜி அரவிந்த் ஷர்மா உத்தரவின் பேரில் சுங்கவரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மொத்தம் 250 கிலோ எடையும், மொத்த மதிப்பு ரூபாய்.3 லட்சம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.