தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 பேர் குணமடைந்த நிலையில் 1173 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தேனியில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப் படும் என வியாபாரி சங்கம் அறிவித்துள்ளது. பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருந்துக்கடைகள், பால் நிலையங்கள் மட்டும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.