கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் வேலைவாய்ப்பு என்ற குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலை தேடும் இளைஞர்களுக்கு நாளை இணையவெளியில் தொழில்நெறி கருத்தரங்கங்கள் நீங்கள் உள்ளிட்ட இணையவழி நிகழ்ச்சிகளை வேலைவாய்ப்பு பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் வேலை தேடுவோர் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.