தங்கள் சகோதரி தாயின் மனதை மாற்றி சொத்து முழுவதையும் அவர் பெயருக்கு மாற்றி விட்டதாக சகோதரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்
லண்டனில் Anna Rea என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு Rita என்ற மகளும் Remo, Nino, David, என்னும் மகன்களும் உள்ளனர். Anna உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடைய 850,000 பவுண்ட் மதிப்பு கொண்ட தனது வீட்டை அவருடைய மகளுக்கு உயிர் எழுதி வைத்துவிட்டார். மகன்களுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மகன்கள் மூவரும் சேர்ந்து சகோதரி அம்மாவின் மனநிலையை மாற்றி எங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திய நிலையில் சொத்தை அவர்களுக்கு சாதகமாக வாங்கிக் கொண்டதாக வழக்கு போட்டிருந்தார்கள்.
அவர்களது தாயின் உயிலை வசித்தபோது அதில், இத்தனை ஆண்டுகளாக என்னுடைய மகன்கள் மூவரும் என்னையோ என் மகளையோ கவனித்துக் கொள்ளவில்லை என்றும், என் மகளே முழுவதுமாக என்னை கவனித்துக் கொண்டாள் எனவும் கூறியுள்ளார். அதனால் என் சொத்துக்கள் முழுவதையும் என் மகளுக்கு உயில் எழுதி கொடுத்துள்ளேன் என்றும் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து, நீதிபதி Rita-விற்கு சாதகமான முறையில் தீர்ப்பளித்து விட்டனர். இதனையடுத்து சொத்தை 4 பேருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டுமென சகோதரர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கானது விரைவாக விசாரணைக்கு வரவுள்ளது.