ஆன்லைனில் பொருள் வாங்கிய கஸ்டமர் கொடுத்த முகவரி பரவலாகி வருகிறது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்தவர்களின் பொருட்களை டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களின் முகவரியை தேடி அலைந்து கண்டுபிடிக்க நேரம் மிகவும் செலவாகும். இந்த தொந்தரவு ஏதும் இல்லாமல் ஆன்லைன் கஸ்டமர் ஒருவரின் முகவரியானது மற்றவர்களை காட்டிலும் தனி கவனம் பெற்று வருகிறது.
ராஜஸ்தானில் கோட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் பொருள் வாங்க ஆர்டர் செய்துள்ளார். டெலிவெரி முகவரியாக அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகே வந்த பின் கால் செய்தால் போதும் நானே வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். இது பற்றிய புகைப்படம் ஒன்றை எடுத்து இணைய வாசி ஒருவர் பதிவிட்டு அந்த புகைப்படத்தினை வைரலாக்கி உள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.