கொரோனா பாதித்தவர்களை பிரசவ வார்டுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் மாற்றக்கூடாது என மக்கள் மறியலில் இறங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுகளுக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு கொரோனா பாதித்த 18 நபர்களை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் ராணியார்பேட்டை மருத்துவமனையில் இதற்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் இங்கு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அறிந்த பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்களை இங்கு அனுமதிக்கக் கூடாது என்று கூறி போராட்டத்தில் இறங்கினர். தற்போது அம்மருத்துமனையில் 150க்கும் மேலான பெண்களுக்கு பிரசவம் நடந்திருப்பதால் கொரோனா நோயாளிகளை இங்கே அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.