அமெரிக்கா நேரடியாக மோதலில் ஈடுபடாது ஆனால் இப்பொது பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது என அமெரிக்க சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சீன தூதரகம் தனது வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் தென் சீன கடல் பிரச்சனையை நிராகரிக்கும் அமெரிக்காவானது தற்போது வெளியுறவுத் துறையினரின் அறிக்கையை எதிர்ப்பதாக சீனா குறிப்பிட்டிருந்தது. அதோடு சீனா அவர்களுடைய அண்டை நாடுகள் முழுவதையும் கொடுமை செய்வதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டு “முற்றிலும் நியாயமற்றது” எனவும் சீனா கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவானது நேரடியாக மோதலில் ஈடுபட கூடிய நாடு இல்லை. ஆனாலும் இப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய செயலானது ஸ்திரத்தன்மையை தாக்கக்கூடிய போலி காரணத்தின் கீழ், பிராந்தியத்தில் மோதலையும் பதற்றத்தையும ஏற்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.