Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் …!!

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏக்கள் அனைவரும் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வருவதால் அவர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது;. இந்த நிலையில்தான் தற்போது ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாகவும்,  காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே போல சச்சின் பைலட் உடன் அவருடைய ஆதரவு இரண்டு அமைச்சர்களும் அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |