ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. சிங்கப்பூரில் இதுவரை 45,961 மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்த நிலையில் 26 நபர்கள் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு ,மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.இந்த ஊரடங்கு ஜூன் 2-ம் தேதி முதல் அரசால் தளர்த்தப்பட்டது.
சிங்கப்பூரின் கிம்கீட் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடைபெறும் மது விருந்து நடைபெற்றது, இதில் கலந்து கொள்வதற்காக சஜன்தீப் சிங் , அவினாஷ் கவுர்,நவ்தீப் சிங் போன்ற மாணவர்கள் மற்றும் ஒரு பெண்ணும் அழைக்கப்பட்டு விருந்தில் பங்கேற்றுள்ளனர். மே 5-ம் தேதி அதாவது பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் இந்த விருந்து நடைபெற்றிருந்தது , இதில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இந்தியர்கள் பத்து பேர் சேர்ந்து கூடியுள்ளனர் என்பதால் சிங்கப்பூர் போலீஸ் 10 இந்தியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதமும் விதித்தது.
இந்த அபராதம் இந்திய மதிப்பில் ரூ .1 லட்சத்து 8 ஆயிரம் முதல் 43 ஆயிரம் வரை இருக்கும். இதைத்தொடர்ந்து 10 இந்தியர்கள் உட்பட மாணவர்களையும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட தாகவும் மீண்டும் அவர்கள் சிங்கப்பூர் வருவதற்க்கு தடைவிதிக்க படுவதாகவும் சிங்கப்பூர் போலீஸ் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் அறிக்கையில் கூறியுள்ளனர்.