அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாதவர்கள் மரங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இஸ்ரேல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே பயமுறுத்தி வருகிறது. இப்பொழுது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் தங்கனை காத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைக்கொடுத்து பேசக்கூடாது என வலியுறத்தியுள்ளனர். இதனால் நமக்கு மிகவும் வேண்டியவர்களிடம் அன்பைக்காட்டவும் அவர்களை அரவணைத்து, கைக்கொடுக்கவும், அருகில் நின்ற பேசவோ முடியாமல் மக்கள் தடுமாறி வருகிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.
இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பூங்காவில் உள்ள மரங்களை கட்டிப்பிடித்து உங்களின் அன்பை வெளிப்படுத்தி, மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் என இஸ்ரேலிய பூங்கா அதிகாரி ஒருவர் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் உலக மக்கள் அனைவரும் இதை செய்யுங்கள் என சமூக வலைதளங்கள் மூலம் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.