Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்த வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |