ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக துணை முதல்வர் அசோக் கெலாட் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசியல் விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பாஜக ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது. அவர்களுக்கு வேற வேலையே இல்லையா ? என கடுமையாக சாடியுள்ளது. மேலும் துணை முதல்வர் சச்சின் பைலட் இப்படி நடந்து கொள்வது தவறு என்றும், அது அவருக்கு ஆபத்தாக முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.