Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ரத்து – மத்திய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கொரோனவைரஸ் தற்போது பிற மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் மீண்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வகையில் மாவட்ட அமைச்சர்கள்  தங்களது மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசிடமும் தமிழக அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை ஜூலை 31 ஆம் தேதி ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி, மதுரை – விழுப்புரம் – மதுரை, கோவை – காட்பாடி – கோவை, கோவை – அரக்கோணம் – கோவை ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |