துலாம் ராசி அன்பர்களே…! இன்று உயர்ந்த எண்ணங்களை நீங்கள் செயல்படுத்துவீர்கள். ஆனால் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி பெண்கள் கூடுதல் வருமானம் கிடைக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யாருக்கும் இன்று ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பொறுமையாக இருங்கள் நிதானமாக செயல்படுங்கள். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து தான் காணப்படும். மேலதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லுங்கள். எதையும் மனம் விட்டுப் பேசி செய்வது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சியுடன் செய்திகள் சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணம் வரவு அதிகமாக இருக்கும்.
வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாகவே செல்லுங்கள். காதலர்கள் பேச்சில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.