Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…கருத்து வேற்றுமை நீங்கும்…லாபம் உண்டாகும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!  இன்று சொல்லின் அந்தஸ்து காப்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதும் இலகுவாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம், அனுசரணையும் இருப்பது நல்லது.

கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பொழுது கவனமாக அனுப்பவேண்டும். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

தேவை இல்லாத விஷயத்தை பற்றி பேசி வாக்கு வாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் -3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |