Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற பெண் கொடூர கொலை… நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன்… கொல்லிமலை அருகே அதிர்ச்சி..!!

கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர். ஆனாலும் தீபா கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தீபா எடுக்காடு வனப்பகுதியில் ஆடைகளின்றி நிர்வாணமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரின் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளமும், காணப்பட்டன. இதனை கண்டு தீபாவின் கணவர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாழவந்தி நாடு போலீசார் குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்ட அடையாளம் தெரியாத மரம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories

Tech |