தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதன் பிடியில் சிக்கியிருந்த தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் நோயின் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1456 நோய் கட்டுப்பட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டப்பட்டு பகுதிகள் 1089லிருந்து 1456ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 276, சேலம் – 138, மதுரை – 108, திருப்பூர் – 97 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கடந்த பத்தாம் தேதி நிலவரப்படி நாமக்கல, பெரம்பலூர், தர்மபுரியில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.