ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழலில்…. கல்வி சார்ந்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடத்திட்டம் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் தெரிவித்து நடத்தி வருகின்றன.
இதனால் மாணவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 வகுப்புகள், 9 முதல் 12ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என நான்கு வகுப்புகள், எல்கேஜி – யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.