கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீட்டிற்க்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா குறித்த ஆலோசனைகள், முன்னெச்சரிக்கைகள், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு வகைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். குறிப்பாக வீட்டிலிருப்பவர்களுக்கு கொரோனா குறித்து மொபைல் வீடியோ மூலமாக ஆலோசனை பெறுவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெற இ- சஞ்சீவன் ஓபிடி திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியது. www.esanjeevaniopd.in என்ற இணையத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்து வீடியோ காலில் மருத்துவ ஆலோசனை பெறலாம். தற்போது தமிழகத்தில் இதற்கான ஆலோசனை நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.