நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.
ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை, மும்பை, ஹைதாராபத் அணிகளிடம் தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் அணியின் தொடர் தோல்வி குறித்து விராட் கோலி “நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் எங்கள் அணி சிறந்த தொடக்கத்தை தரவில்லை. இது வருத்தம் அளித்தாலும், அதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.. நாங்கள் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நன்றாக விளையாடினோம். எங்களுக்கு தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. எங்கள் அணியினரிடம் அமர்ந்து பேசி ஆலோசிக்க வேண்டும்.நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சில கேட்சிகளை தவற விட்டோம். பல தவறுகளை செய்ததால் நாங்கள் தோற்க நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.