Categories
தேசிய செய்திகள்

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு… உடலை குளிர்ச்சியாக்க திணறும் மலைப்பாம்பு… வைரலாகும் வீடியோ.!!

வயிறுநிரம்ப உணவை உட்கொண்ட பின் ஒரு மலை பாம்பு உடலை குளிர்ச்சியாக வைக்க தண்ணீரில் மூழ்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலை பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிவிட்டு வயிறுமுட்டிய நிலையில் வேகமாக நகர முடியாமல் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி ஒன்றில் உடலை குளிர்ச்சியாக்க முயற்சி செய்கிறது.

வயிற்றில் எடை அதிகமாக இருப்பதால் அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து தனது முழு உடலை தண்ணீரில் நனைக்க முடியாமல் திணறுகிறது. பின்னர் பாதி உடலை மட்டும் தண்ணீர் தொட்டியில் நனைத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறது.. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Categories

Tech |