திருவள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
ஐ .ஆர். சி. டி. எஸ் என்ற தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் உள்ள எம்.டி.எம் நகரில் இயங்கிவருகின்றது. 40 வயதுடைய முருகன் என்பவர் தான் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார் . இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் சேர்ந்து இதில் தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சோழவரம் காவல் நிலையத்தின் வழக்கு ஒன்றில் தொடர்புடைய 17 வயதான சிறுவனும் மற்றும் வேறு ஒரு 10 வயதான சிறுவனும் கடந்த 11-தேதி அன்று இரவு கதவின் தாழ்ப்பாளில் உள்ள ஸ்க்ருவை கழட்டி கதவைத்திறந்து, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதையறிந்த ஒருங்கிணைப்பாளரான பழனி திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார், இதைத் தொடர்ந்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய சிறுவர்களை திவீரமாக தேடி கொண்டிருக்கின்றனர்.