Categories
தேசிய செய்திகள்

வங்கி செல்லும் மக்களே….. இனி இதற்கு அனுமதியில்லை…. வெளியான விதிமுறை பட்டியல்…!!

வங்கிகளில் பொதுமக்கள் கீழ்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை அமுலில் இருக்கிறது. முதற்கட்ட நிலையில் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயக்க தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அவ்விடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை சுகாதாரத்துறையினர் அறிவுரைப்படி பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வங்கி செல்வோருக்கான விதிமுறைகளாக,

  1. தனி மனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  2. முககவசம் அணிந்துதான் வரவேண்டும். அணியாதவர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதி இல்லை.
  3. வங்கிகளில் டோக்கன் முறை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  4. ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
  5. பாஸ்புக் பதிவு மற்றும் குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |