தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இனி எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தற்போதைக்கு பள்ளியை திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் 14 தொலைக்காட்சிகள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டரை மணி நேரம் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.