ஆன்லைன் ஆர்டரில் ஆடையை வாங்கும் முயன்ற போது இளம்பெண் வங்கி கணக்கிலுருந்து 4 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரில் உள்ள தலகட்டபுராவில் ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் தனக்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை செலுத்தினார். இவர் ஆர்டர் செய்ததில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஆடைகள் வரவில்லை என்று கஸ்டமர்கேர் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசியவர் தாங்கள் பணம் செலுத்திய வங்கி மற்றும் வங்கி அட்டை எண் போன்ற விவரங்களை மெசேஜில் கேட்டுள்ளார்.
ரிங்கியும் அந்த நபர் கேட்ட அனைத்து விவரங்களையும் மெசேஜ் மூலமே அனுப்பிவிட்டார். அனுப்பிய சில நிமிடங்களில் ரிங்கின் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்டுவிட்டது இதையறிந்த ரிங்கி தனது பணத்தை திருடி விட்டார்கள் என்று அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார், இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய அந்த மர்மநபரை தேடிவருகின்றனர்.