Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தன்னம்பிக்கை கூடும்…மனஅமைதி உண்டாகும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  இன்று தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும் நாளாக இந்நாள் இருக்கும். இன்று சின்ன சின்ன தடைகள் வந்து செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் அவ்வப்போது இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் செய்யுங்கள்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். உங்களுடைய திறமையால் இன்று காரியங்களை மிகச்சிறப்பாக நீங்கள் செய்து முடிப்பீர்கள். அதேபோல சொன்ன சொல்லையும் நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவிர்கள்.

காதலர்களுக்கும் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறப் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |