சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின் கணவருடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ முடியாமல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் விக்னேஷிடம் பேச முயற்சித்துள்ளார் அனிதா. அப்போது விக்னேஷ் உனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற காரணத்தைக் கூறி விலகியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அடைந்த அனிதா விக்னேஷின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். பின் தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து தன் காதலன் வீட்டு முன்பு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.