விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அன்பு மனைவி செய்யும் பணி விடையை கண்டு அகமகிழ்வீர்கள். மனைவி மூலம் இன்று முன்னேற்றமான சூழல் இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். மகிழ்ச்சியான வாழ்க்கை இன்று அமையும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்க தொழில் வியாபாரத்தில் இருந்த டென்ஷன் குறையும்.
மெத்தனப் போக்கு மாறும். மந்த நிலை மாறி முன்னேற்றம் இருக்கும். இன்று எல்லா விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன்களே கொடுத்தாலும் கவலைப்படாதீர்கள். அனைத்து விஷயங்களும் நன்மையே நடக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும் என்பதை சரியாக புரிந்து கொண்டவர்கள் நீங்கள்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்கள் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை இருப்பதால் குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.