மகர ராசி அன்பர்களே …! இன்று வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை தயவுசெய்து மேற்கொள்ளுங்கள். வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதே போல யாரிடமும் பேசும் பொழுதும் கொஞ்சம் நிதானம் இருக்கட்டும்.
காரியத்தில் தாமதம் ஏற்பட்டாலும் கவலைப்படாதீர்கள். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணமும் கையில் வந்து சேரும். தன்னை தானே உயர்த்திக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் நீங்கள் பாடுபடுவீர்கள். மன தைரியம் கூடும். எல்லா வகையிலும் உங்களுக்கு சுகம் உண்டாகும்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் நல்லதாகவே அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வியாழக் கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.