கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு நின்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் சின்ன குழந்தையின் தலையில் மிதிக்க குழந்தை சுருண்டு கீழே விழுகிறாள். தனது தாய் கடுமையாக அடி வாங்குவதை பார்த்த குழந்தை கதறி அழுவதை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது.
ஒருவழியாக கர்ப்பிணிப் பெண் எழுந்திருக்க குழந்தையை மிதித்த இளைஞன் அந்தப் பெண்ணின் முதுகில் மிதிக்கிறார். இதனால் அந்த பெண் மீண்டும் கீழே விழுந்து அவரது தலை வாசல் நிலை கம்பத்தில் இடிக்கிறது. இந்த காணொளி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த 2,77.000 முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து கோபமடைந்தவர்கள் வீடியோவில் இருப்பவர்கள் குறித்த தகவல் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துமாறும் அது புகார் கொடுப்பதற்கு பெரிதும் உதவும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.