தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது .