கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் கடந்த மார்ச் பருவத்தில் பிளஸ் 1 மாணவர்கள் எழுதிய தேர்வுகளில் முடிவுகளும் இணையத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.