Categories
உலக செய்திகள்

“மாணவர்கள் எங்கும் செல்ல வேண்டாம்” ட்ரம்ப் முடிவுக்கு தடை – நீதிமன்றம் அதிரடி..!!

ஆன்லைனில் மட்டுமே பாடங்களை கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற டிரம்ப் தலைமையிலான அரசின் உத்தரவிற்க்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனாவால் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்காவில்  தற்போது பெரும்பாலான பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து ஒரு வகுப்புக்கும் செல்லாமல் ஆன்லைன் வழியாக மட்டும் பாடம் கற்கும் மாணவர்களை உடனடியாக அமெரிக்க நாட்டை விட்டு வெளியேற அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகம், கூகுள் பேஸ்புக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது விசாரணை முடிவில் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று ஆணை பிறப்பித்து, அரசு விதித்துள்ள உத்தரவை திரும்ப பெறவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Categories

Tech |