தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு முடிவு பல்வேறு வினாக்களை எழுப்பியது. இதுகுறித்து கல்வித் துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
ஈரோடிற்கு நாளை தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வருகின்றார். இதனை பறவையிட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் திடீரென்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதே… இது உங்களுக்கு தெரிந்து அறிவிக்கப்பட்டதா ? அல்ல தெரியாமல் அறிவிக்கப்பட்டதா ? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அமைச்சர் இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்க கூடாது. அறிவித்தது நல்லதா ? கெட்டதா என்று கேட்க அதற்கு பத்திரிக்கையாளர்கள் நல்லது என்று சொல்லி முடிப்பதற்குள் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பாதியிலே சென்றுவிட்டார். இது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி காண பல்வேறு அம்சங்கள் குறித்த அறிவிப்புகளை மிகவும் சிறப்பாக அறிவித்து வந்த நிலையில் அமைச்சரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.