அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் போராடி தன் தங்கையின் உயிரை மீட்டெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவன்
பிக்ஜர். இவன் தன் தங்கையை காப்பாற்ற தனது உயிரை பணயவைத்து போராடியுள்ளார். சிறுவனின் அத்தை நிக்கி வல்கார் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து 8 லச்சதுக்கும் மேற்பட்டோர் ஷர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அந்த பதிவில் நிக்கி கூறியது, “எங்களின் சிறிய ஹீரோ அவரின் விருப்பமான பல ஹீரோக்களிடம் இருந்து சில ஊக்கம் மிகுந்த வார்த்தைகளை பெற விரும்புவார் என்பது எங்களுக்கு தெரியும் எனவே இந்த கதையை அனைவரும் தயவு செய்து பகிர்ந்து பலப்படுத்துங்கள்” என தெரிவித்தார்.
கடந்த 9ம் தேதி என் மருமகன் அவனது தங்கையை நாயிடமிருந்து காப்பாற்ற எதிர்த்துப் போராடியதால் அவனது கழுத்திலும் முகத்திலும் நாய் கடித்துள்ளது. இருந்தும் விடாமல் போராடி தனது தங்கையை காப்பாற்றி உள்ளான். இந்த போராட்டத்தில் அவனுக்கு ஒன்பது தையல் போடப்பட்டுள்ளது. எங்களது சூப்பர் ஹீரோவை நாங்கள் நேசிக்கிறோம். எங்கள் ஹீரோ எங்களிடம் கூறியது இது ஒன்று தான் ” உயிர் பிரியும் நிலை வந்தால் அது என்னுயிராக இருக்கட்டும்” என்றான் நாங்கள் நெகிழ்ந்து போய் விட்டோம் என தெரிவித்துள்ளார்.