தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. சென்னையில் தொற்று குறைந்து வந்தாலும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் தொற்றுஉயர்ந்து வருவது அரசுக்கு பெருத்த சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று காலைவரை பதிவாகிய கொரோனா தொற்று விவரம் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு, 1,925 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் 130 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 320 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.