தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்ளிட்ட ஆறு நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி தன் குடும்பத்தினருடன் டாட்டா சுமோ காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அடுத்துள்ள பாதிரி கிராம நெடுஞ்சாலையில் கார் சென்றபோது தூக்க கலக்கத்தில் ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 3 வயது பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு குழ்ந்தைகள் உட்பட காயம் ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, காவலர்கள் அனைவரும் மீட்புப்பணியினுள் ஈடுபட்டிருந்தனர். மேலும் காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தோர் சடலங்கள் அனைத்தும் அங்குள்ள விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.