Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னை திருமணம் செய்து கொள்… இல்லன்னா… காதலன் சொன்ன வார்த்தை… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு  11ஆம் படிக்கவுள்ளார்.

இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. செல்லப்பாண்டி சரக்கு வேன் டிரைவராக உள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் கவிதாவின் வீட்டுக்குத் தெரியவந்ததையடுத்து கவிதாவின் பெற்றோர் செல்லப்பாண்டியை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் செல்லப் பாண்டி கவிதாவிடம் சென்று என்னை நீ திருமணம் செய்து கொள், இல்லையென்றால் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கவிதா அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவின் உடலை மீட்டு  உடற்கூறாய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கவிதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மரணத்திற்கு காரணமான செல்லப்பாண்டியை கைது செய்ய வேண்டும் என, போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் செல்லப்பாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |