Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட் – ஒரு வாரம் கெடு விதித்தது …!!

கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது,

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களை எந்த பாகுபாடும் பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், அனைவருக்கும் ஒரு வாரத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தனர்.

Categories

Tech |