கிரிகோரியன் ஆண்டு : 199 ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 200 ஆவது நாள்.
ஆண்டு முடிவிற்கு : 166 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.
1290 – பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.
1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.
1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.
1806 – மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
1841 – இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார்.
1870 – முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.
1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது
1942 – செருமனி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1968 – இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.
1994 – அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.
1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்.
1997 – மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
2007 – மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
2012 – பல்காரியாவில் இசுரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
2013 – அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.
பிறப்புகள்:
1852 – பால் கேரஸ், செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1919)
1853 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. 1928)
1893 – ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. 1957)
1861 – கடம்பினி கங்கூலி, இந்தியப் பெண் மருத்துவர் (இ. 1923)
1909 – இரா. கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1997)
1918 – நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. 2013)
1919 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமஸ்தானத்தின் 25வது, கடைசி அரசர் (இ. 1974)
1926 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (இ. 2015)
1927 – மெகுதி அசன், பாக்கித்தானியப் பாடகர் (இ. 2012)
1935 – செயந்திர சரசுவதி, இந்திய ஆன்மிகத் தலைவர், 69வது சங்கராச்சாரியார்
1950 – றிச்சர்ட் பிரான்சன், ஆங்கிலேயத் தொழிலதிபர்
1950 – யக் லேற்ரன், கனடா அரசியல்வாதி (இ. 2011)
1964 – வெண்டி வில்லியம்சு, அமெரிக்க ஊடகவியலாளர்
1967 – வின் டீசல், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)
1971 – சுக்விந்தர் சிங், இந்தியப் பாடகர், நடிகர்
1975 – மாதங்கி அருள்பிரகாசம், ஆங்கிலேய–ஈழ ராப் இசைக் கலைஞர்
1978 – ஜோ சாங்-வூக், தென்கொரிய நடிகர்
1980 – கிறிஸ்டன் பெல், அமெரிக்க நடிகை, பாடகி
1982 – பிரியங்கா சோப்ரா, இந்திய நடிகை
1985 – சாஸ் கிராஃபோர்ட், அமெரிக்க நடிகர்
இறப்புகள்:
1610 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1573)
1721 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (பி. 1684)
1817 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)
1931 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, செருமானிய நோயியலாளர், வானவியலாளர் (பி. 1858)
1974 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (பி: 1918)
1982 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1896)
2005 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (பி. 1921)
2012 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (பி. 1942)
2013 – வாலி, தமிழகக் கவிஞர் (பி. 1931)
2013 – செ. பெருமாள், தமிழக அரசியல்வாதி (பி. 1950)
2013 – சமர் முகர்ஜி, இந்திய மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)
சிறப்பு நாள்:
நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்