பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதன் காரணமாக கல்லூரிகளில் அட்மிஷன் மிகத் தாமதமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பிஇ பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அட்மிஷன் தற்போது துவங்கியுள்ளது. அட்மிஷன் தொடங்கியதன் காரணமாக மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு என்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்நிலையில் அமைச்சர் கேபி அன்பழகன் இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 10 மணி நேரத்தில் ஐந்தாயிரம் பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 1,700 பேர் வெளியான +2 மதிப்பெண் பட்டியலை வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கட்டணத்தையும் செலுத்தி அட்மிஷன் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்கண்டபடி, கொரோனாவால் தாமதமாக நடைபெற்று வரும் பிஇ அட்மிஷன் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 16ஆம் தேதி வரை தாராளமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.