சென்னை, கோசராபாளயம், திருநின்றவூர் திமுக பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பரமகுரு. இவர் நேற்று கடந்த 13ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தனது சொந்தக் கட்சியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள், இந்த குற்றத்தைச் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்..
அதில், 3 பேர் திமுக இளைஞர் அணி உறுப்பினர்கள் ஆவர்.. முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் ரியல் எஸ்டேட் தகராறுக்காக நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.. இதையடுத்து, போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.