இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (24). இவர் பி.இ முடித்து சென்னை ஐடி கம்பேனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (வயது 21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது.. ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள், ரூ 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தேவையான அனைத்துப் பொருட்களையும் சீர் வரிசையாக வழங்கி தான் திருமணம் முடித்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளான்.
இந்தநிலையில் ஷோபனாவிடம் அவரது மாமியார் மற்றும் கணவர் அடிக்கடி வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் விஜயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவரை வீட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த ஷோபனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை அவர் வீட்டின் ஒரு அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,ஷாபனாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஷோபனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்மா எங்கிட்ட வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் மற்றும் கணவர் அடித்து துன்புறுத்துகிறார்கள்.. அந்த பெண்ணை வீட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் என்னை துன்புறுத்துகிறார்கள்.. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்.. நான் இறந்த பிறகு தன்னுடைய மகனுக்கு மட்டுமே அனைத்து சொத்தும் சேர வேண்டும், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்..
என்னை எப்படி வளர்த்து ஆளாக்குனீங்களோ அதே போல் தனது மகனையும் வளர்த்து ஆளாக்குங்கள் அம்மா, என உருக்கத்துடன் பேசியிருந்தார். தற்போது அந்த வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.