கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது.
இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப் படவில்லை என்று விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து தற்போது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக கூட்டுறவு வங்கி கடன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடன்களை மீண்டும் வழங்க அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து விதமான கடன்களும் தங்கு தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.