Categories
மாநில செய்திகள்

“10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை” தூக்கு தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்…!!

10 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. பல முக்கியமான சாட்சிகளின் வாக்குமூலங்கள் கால தாமதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பல முக்கிய சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்ட மனுதாரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் ஒரு வழக்கில் அரசு தரப்பு விசாரணையின் குறைபாடின் காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு. இதனால் விசாரணை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உள்துறை செயலர் புதிய சட்ட விதியை உருவாக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ராஜாராமன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து கொலையான சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 3 மாதத்தில்  ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

Categories

Tech |