Categories
சினிமா தமிழ் சினிமா

சாக்ஷி அகர்வாலா? ரம்பாவா ? குழம்பி நிற்கும் ரசிகர்கள் … வைரலாகும் புகைப்படம்..!!

சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ரம்பா போன்று காட்சியளிக்கும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த கொரோனா  காலகட்டத்தில் வெளியே எங்கேயும் சென்று சுற்றி பார்க்க முடியவில்லை என புலம்பும் பல பிரபலங்களுக்கு மத்தியில் நடிகை சாக்ஷி அகர்வால் தான் இருக்கும் இடத்திலேயே தனது நாட்களை அழகாக கழித்து வருகின்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, வித விதமாக சமைத்து சாப்பிடுவது மற்றும் இளைஞர்களை கவரும் வண்ணமாக உடை அணிந்து  அதை தவறாமல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது என தன்னை எப்பொழுதுமே பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் சக்ஷி அகர்வால்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஏஞ்சல் போல மேக்கப் போட்டு எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் கடந்த 2013ல்  எடுக்கப்பட்டது இதை பார்க்கும் போது  நான் யாரைப் போல் தெரிகிறேன் என்று புதிர் போட்டிருந்தார். இந்த படத்தை பார்த்து பலரும் திரையுலகில் உள்ள ஒரு பிரபலத்தை போல் நான் இருப்பதாக சொல்கின்றார்கள். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் என பதிவிட்டிருந்தார். இப்படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நீங்கள் பார்ப்பதற்கு அப்படியே நடிகை ரம்பாவை போல இருக்கிறீர்கள் என்றும்  ரம்பாவின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளீர்கள் என்ற சந்தேகம் கூட வந்ததாகவும்  பலர் கூறி வருகின்றனர்.

Categories

Tech |