Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ரத்த சோகை” இந்த பழம் பலன் அளிக்கும்….!!

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு.

1.  நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும்.

2.  நாவல் பட்டை சூரணத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி குழம்பு பதத்தில் வரும்போது அதை ஆறவைத்து மேல் பூச்சாக பூசி பற்றாகப் போட்டு வந்தால் வாத நோய் தணிந்து வலியும் குறையும்.

3.  நாவல் பழ சாறு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் நெய் இரண்டையும் சம அளவாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாக சக்தி அதிகரிக்கும்.

4.  அடிக்கடி நாவல் பழத்தை சாப்பிடுவதால் நுரையீரல் தூண்டப்பட்டு சீராக செயல்படும். மேலும் சிறுநீர்ப்பை கோளாறுகளும் நீங்கும். நாவல் கொழுந்து மற்றும் மாவிலைக் கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்து சாப்பிடுவதால் சீதபேதி, ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்

5.  நாவல் மரப்பட்டையை  தூள் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் ஏற்பட்ட புண், பல்சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்றவை குணமாகும். மேலும் இந்த நீரை கொண்டு புண்களையும் சுத்தம் செய்யலாம்.

Categories

Tech |